கமெண்ட் போட்டோமா ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய.... சிவகார்த்திகேயன் யாரை கலாய்த்தார்?
முகப்பு > சினிமா செய்திகள்

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த திரைப்படங்கள் பல ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயேன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஃபோட்டோவை பதிவிட்டு அதற்குக் கேப்ஷனாக, ‘மறுபடியும், போறபோக்குல ஒரு ஃபோட்டோ ஷூட், படத்தை எடுத்தவர் நவ்நீத்’ என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவரைக் ஒரு கமெண்ட் போட்டார். அதில், ‘போறபோக்குல பண்ணதுக்கே இப்டின்னா??? அப்போ ப்ளான் பண்ணி பண்ணியிருந்தா வேற மாறி போலயே....ஸ்டைலா இருங்கீங்களே’ என்று பதிலிட்டார்.
அந்தப் பதிவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன், ‘கமெண்ட போட்டோமா ரெண்டு கலாய் கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காபி தண்ணிய குடிச்சம்மான்னு இருங்க இயக்குனரே....இன்ஸ்டாலேயே சுத்திட்டு திரிய கூடாது’என்று கலாய்த்து பதில் போட்டார்.