நடிகை தமன்னா நடிப்பில் புதிதாக உருவாகவிருக்கும் காமெடி கலந்த ஹாரர் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘அதே கண்கள்’ திரைப்படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஹாரர் கலந்த காமெடி திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் ஜோடி இல்லாமல் சோலோ ஹீரோயினாக நடித்த நயன்தாரா, யோகி பாபுவுடன் காமெடி டிராக்கில் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், தமன்னாவும் ஜோடி இல்லாமல், இப்படத்தின் காமெடி டிராக்கில் நடிகர் யோகி பாபுவுடன் கைக்கோர்க்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்.14ம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.
நமக்கு கிடைத்த தகவலின்படி, இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மே.2ம் தேதி தொடங்கி, ஜூன் 15ம் தேதி வரை ஒரே கட்டமாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.