34 வருஷத்துக்கு அப்புறம் ஆஸ்கார் நிகழ்ச்சியில் நடக்க இருக்கும் மாற்றம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Johnmani | Feb 16, 2022 12:15 PM

சினிமா உலகில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெறும். இதில் உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாது சிறந்த இயக்குனர், திரைக்கதை ஒளிப்பதிவு, இசை, துணை நடிகர், துணை நடிகை என 23 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  94 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி கலிபோர்னியாவில் நடைபெற இருக்கிறது.

First time in history 3 women host Oscar 2022 Function

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியினை 3 பெண்கள் தொகுத்து வழங்க இருப்பதாக ஆஸ்கார் விருது அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் பலரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். வாண்டா சைக்ஸ், எமி ஷுமர் மற்றும் ரெஜினா ஹால் ஆகிய மூன்று பெண்கள்தான் இந்த விழாவினை தொகுத்து வழங்க உள்ளனர்.

First time in history 3 women host Oscar 2022 Function

ஆஸ்கார் நிகழ்ச்சி தொகுப்பாளர்

ஆஸ்கார் விருதை போலவே,அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பதும் எப்போதும் கவனம் பெறும். சொல்லப்போனால் ஆஸ்கார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலங்களுக்கு என தனியே ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொகுப்பாளர் இல்லாமலேயே ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வருட ஆஸ்கார் நிகழ்ச்சியை 3 பெண்கள் தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு

1987-க்கு பிறகாக ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வை மூன்று பேர் ஒருங்கிணைந்து தொகுத்து வழங்க உள்ளனர். 1987 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவினை செவி சேஸ் (Chevy Chase), கோல்டி ஹான் (Goldie Hawn) மற்றும்  பால் ஹோகன் (Paul Hogan) ஆகியோர் தொகுத்து வழங்கினர். அதன்பிறகு சுமார் 34 வருடங்கள் கழித்து தற்போதுதான் 3 பேர் ஆஸ்கார் விருதை தொகுத்து வழங்க உள்ளனர். அதுவும் இந்த பிரம்மாண்ட விழாவை 3 பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

வெளியேறிய ஜெய் பீம்

First time in history 3 women host Oscar 2022 Function

பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆஸ்கார் தகுதி பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெற்றாலும் இறுதி பட்டியல் தயாரிப்பின் போது அப்படம் வெளியேறியது. இருப்பினும் இந்த முறை சிறந்த ஆவணப்படம் (Best Documentary Feature) பிரிவுக்கான பரிந்துரையில் இந்திய படைப்பான ‘ரைட்டிங் வீதி ஃபயர்’ இடம் பெற்றுள்ளது. இப்படம் ஆஸ்கார் வாங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags : #OSCAR #OSCAR 2022

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. First time in history 3 women host Oscar 2022 Function | India News.