ஐபிஎல் மெகா ஏலம் : முதல் வீரராக வந்த ஷிகர் தவான்.. கடும் போட்டி போட்ட அணிகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வந்த இந்திய வீரர் ஷிகர் தவான், கடந்த சீசனில் 587 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், நான்காம் இடம் பிடித்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த போதும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை தக்க வைத்துக் கொள்ளாமல், அணியில் இருந்து வெளியேற்றியது.
அதன் பின்னர், அவ்ரது பெயரும் ஐபிஎல் ஏல பட்டியலில், 2 கோடி ரூபாய் தொகை கொண்டு, இடம்பெற்றிருந்தது. இடதுகை தொடக்க வீரர் வேண்டும் என சில அணிகள் கட்டம் கட்டி வந்த நிலையில், அந்த அணிகள் எல்லாம் ஐபிஎல் ஏலத்தில் தவானுக்கு கடுமையாக போட்டி போட்டது.
அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள், அவரை அணியில் இணைக்க வேண்டி, மோதிக் கொண்டது. தொடர்ந்து, பஞ்சாப் அணியும் இவர்களுடன் போட்டி போட, இறுதியில் பஞ்சாப் அணி 8.25 கோடி ரூபாய்க்கு சொந்தம் ஆக்கியது.
முதலில், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவானை எடுக்க போட்டி போட்ட நிலையில், நடுவே வந்த பஞ்சாப் அணி, தவானை தட்டித் தூக்கியது. மயங்க் அகர்வாலை பஞ்சாப் அணி, தக்க வைத்துள்ள நிலையில், தவானுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது.