சமந்தா நடிக்கும் புதிய படம்! 3 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்ட செட்! படக்குழு வெளியிட்ட BTS PHOTOS!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Vijay Kumar | Feb 21, 2022 12:58 PM

Sridevi Movies தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைபடத்துக்காக பிரமாண்ட செட் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது!

Sridevi Movies unveils a Magnificent set for Samantha’s

நடிகை சமந்தாவின் அடுத்த பிரமாண்ட படமான  ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார், திரைத்துறையில் திறமைமிகு  இளம் ஜோடிகளான ஹரி - ஹரிஷ் கூட்டணி இந்த படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக கலை இயக்குனர் அசோக் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது.., “சமந்தா நாயகியாக நடிக்கும் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘யசோதா’ படத்தின்  கதை 30 முதல் 40% காட்சிகள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் நடக்கிறது. இதற்காக நாங்கள் பல நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றோம், ஆனால் இதுபோன்ற ஹோட்டல்களில் 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது மிக சிரமமாக இருந்தது.

எனவே, கலை இயக்குனர் அசோக்கின் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரமாண்ட செட் ஒன்றைத் அமைக்க முடிவு செய்தோம். இதில் 7 முதல் 8 செட் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால், லைப்ரரி என  ஒரு  7  ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டது.

பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 6 முதல் கிறிஸ்மஸ் வரை முதல் கட படப்பிடிப்பு முடித்து, ஜனவரியில் சங்கராந்திக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது.

Tags : #TEST NEWS #SEO

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sridevi Movies unveils a Magnificent set for Samantha’s | Tamil Nadu News.