துல்கர் சல்மான் - ரக்‌ஷன் செம ஃபன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இருந்து செம எனர்ஜியான பாடலின் மேக்கிங் வீடியோ எக்ஸ்க்ளூசிவாக வெளியானது.

Dev3 T-TamF 1 Feb24 BT

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ரக்‌ஷன், நிரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாடலின் மேக்கிங் வீடியோ பிரத்யேகமாக பிஹைன்ட்வுட்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. கொண்டாட்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலில், நீச்சல் குளத்தில் அழகிய பெண்களுடன் துல்கரும் ரக்‌ஷனும் ஆட்டம் போடுகிறார்கள். மிகவும் கலர்ஃபுல்லாக இப்படத்தின் பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் 28-ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

Dev3 T-TamF 1 Feb24 BT

People looking for online information on Dev3 Sep Personality, Dev3tag will find this news story useful.