இந்தா வந்துருச்சில்ல அடுத்த சண்டை.. என்ன நடக்கப் போகுதோ!! வார்த்தை போரில் பிரியங்கா & தாமரை!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் தினந்தோறும் நடக்கும் பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய் இருவருக்குமிடையிலான சண்டைகள் வாரவாரம் ஆரவாரமாக போய்க்கொண்டிருக்கின்றன.

இவர்கள் இருவரும் போட்டுக்கொண்டு வரும் சண்டை கொஞ்ச நஞ்சமா என்றால், இல்லை. முன்னதாக கேப்டனாவதற்கு முன் தாமரை, ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருடனும் இருக்கும் தன் சுய பிரச்சனைகளை, சரிசெய்துகொள்ள வேண்டும் என பிரியங்கா குறிப்பிட்டதுடன், அதுவே கேப்டன் ஆகும் தகுதி என கூறியதாய் கோபப்பட்ட தாமரை, கமலிடம் முறையிட்டார்.
பிரியங்காவோ, தான் அவ்வாறு குறிப்பிடவில்லை என விளக்கம் அளித்ததுடன், கேப்டன் ஆவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டார். அடுத்த வாரத்தில், கட்சி மற்றும் கொடிநாட்டும் டாஸ்க்கில், அபினய்க்கும் தாமரைக்கும் இடையில் சண்டை வந்தபோது, அதில் பிரியங்கா தலையிட்டு, இமான் மற்றும் தாமரை இடையில் நடந்த தள்ளுமுள்ளுவின்போது தாமரை கோபப் படாமல், அவருடன் சமாதானமாக போனதன் அர்த்தம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘தெரியல.. தெரியலனு சொல்றீங்க.. ஆனா நாடகம் போடுறீங்க!’ என தன் கட்சியினரான அபினய் மற்றும் பாவனியுடன் இணைந்து பாட்டு பாடி விமர்சித்தார். இந்த விஷயத்தில் நாடகம் என்கிற தன் தொழிலுடன் சம்மந்தப்படுத்தி பிரியங்கா விமர்சிப்பதும் கிண்டல் அடிப்பதும் வருத்தமாக இருக்கிறது என்று தாமரை தம் வருத்தத்தையும் கோபத்தையும் பதிவு செய்தார்.
இந்த பஞ்சாயத்தை கமல்ஹாசன் எப்படியோ தீர்த்து வைத்துவிட்டார், அத்துடன், வார நாட்களில் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வதாகவும், வார இறுதியில் இருவரும் எப்படியோ சமாதானம் ஆகிவிடுவதாகவும் குறிப்பிட்டார். என்னும் வார இறுதியில் பிரியங்கா மற்றும் தாமரையின் பிரச்சனையை கவனிப்பதிலேயே கமல்ஹாசனுக்கு பாதி நேரம் செல்வாகிவிடுவதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.