இந்தியன்-2 விபத்து : லைகாவுக்கு கமல் கடிதம் இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியன்-2 விபத்து : லைகாவுக்கு கமல் கடிதம்.
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தையடுத்து நடிகர் கமல், லைகா ப்ரொடக்ஷன்ஸ்க்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. ஷங்கர் இயக்கி வரும் இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த வேளையில், க்ரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து நடிகர் கமல், லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த தனது கடிதத்தில், '19-ஆம் தேதி இரவு நடந்த சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்முடன் இருந்து மூவரை நாம் இழந்திருக்கிறோம். பலர் வேலை செய்யும் ஷூட்டிங்கில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே ப்ரொடக்ஷன் கம்பனியின் முக்கிய வேலையாகும், அதனால் பாதுகாப்பு விஷயத்திலும் இன்ஸுரன்ஸ் விஷயத்திலும் ப்ரொடக்ஷன் கம்பனி என்ன ஸ்டெப்ஸ் எடுத்துள்ளது என்பதை நான் முதலில் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு முழு மருத்துவ உதவியை நீங்கள் வழங்க வேண்டும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும், இது போன்ற பாசிட்டிவான நடவடிக்கைகளே, என்னையும் உட்பட படக்குழுவின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தும், அவர்களை தைரியத்துடன் ஷூட்டிங்கிற்கு வர செய்யும்' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Ss1 Dev3 July 29 Bwe Slideshow Dt | Dev3 July 29 Bwe Slideshow Dt - Slideshow
- Ss1 Dev3 Bns Slideshow July 21 Dt
- Ss2 Dev3 Bns Slideshow July 21 Dt
- Ss2 Web Series Review Slideshow Dt | Web Series Review Slideshow Dt - Slideshow
- Ss1 Dev New Ss 262626 Dt | Dev New Ss 262626 Dt - Slideshow
- Ss2 Dev New Ss 262626 Dt | Dev New Ss 262626 Dt - Slideshow
- Dev3 IBlink Review
- Dev3 BNS Column 1 25 June Bt
- Dev3 Bwe Column 1 25 June Dt
- Dev3 Bns Ss 1 25 June Dt
- Ss2 Dev3 Bwe Ss 1 25 June Dt | Dev3 Bwe Ss 1 25 June Dt - Slideshow
- கேட்ட நொடியில் உதவி - WhatsApp குழு அமைச்சு உதவும் போலீஸ் Arjun Saravanan IPS பேட்டி