அயோக்யா, மான்ஸ்டர் படத்திற்கு கிடைத்த க்ரீன் சிக்னல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அயோக்யா, மான்ஸ்டர் படத்திற்கு கிடைத்த க்ரீன் சிக்னல்

Dev3 BWE News 1 June 13 BT

ஒவ்வொரு வாரமும் தமிழில் மட்டும் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் 10ஆம் தேதியும் ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் விஷாலின் 'அயோக்யா' திரைப்படத்தின்  சென்சார் தகவலும், அடுத்த வாரம் வெளியாகவுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படத்தின் சென்சார் தகவலும் தற்போது வெளியாகவுள்ளது.

விஷாலின் 'அயோக்யா' திரைப்படத்திற்கு 'யூஏ' சான்றிதழும், எஸ்.ஜே.சூர்யாவின் 'மான்ஸ்டர்' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழும் சென்சார் அதிகாரிகள் அளித்துள்ளனர்,.

அயோக்யா திரைப்படத்தில் விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடித்து வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க, இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன. அதன் ஒரு பகுதியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ்,அனு இமானுவேல், யோகிபாபு, சூரி ,நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இயக்குனர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி  ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக அந்தோணி மற்றும் கலை இயக்குனராக வீரசமர் ஆகியோர்கள் இணைந்துள்ளனர்.

அயோக்யா, மான்ஸ்டர் படத்திற்கு கிடைத்த க்ரீன் சிக்னல் வீடியோ

Dev3 BWE News 1 June 13 BT

People looking for online information on Dev3 Actor, Dev3tag will find this news story useful.